போலீஸ் கமிஷனரிடம் முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன் மனு

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்புவிடம், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன் ஒரு புகார் மனு கொடுத்தார்.

Update: 2021-02-27 00:58 GMT
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்புவிடம், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன் ஒரு புகார் மனு கொடுத்தார். 

அதில், 'நான் 2014 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2020 ஏப்ரல் வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி வந்தேன். ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட அரசு குற்றத்துறை வக்கீலாகவும் மற்றும் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், மாவட்ட செயலாளராகவும் பொறுப்பு வகித்து உள்ளேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நான் எழுதியதுபோல முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர். அதில், நெல்லை மாநகராட்சி ஆணையாளர், நிர்வாக பொறியாளர் ஆகியோர் அடிப்படை வசதிகளை செய்யவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான மனுவை தயார் செய்து எனது கையெழுத்திட்டு முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு பொய்யான மனுவை அனுப்பி உள்ளனர். எனது பெயரை தவறாக பயன்படுத்தி என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்