தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

மேலவாஞ்சூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2021-02-28 17:08 GMT
நாகூர்:
மேலவாஞ்சூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சட்டசபை தேர்தல்
 தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் போலீசார், மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும் என நாகை கலெக்டர் பிரவீன் நாயர்  தெரிவித்துள்ளார்.
வாகன சோதனை
இந்த நிலையில் நாகூரை அடுத்த மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நேற்று தேர்தல் பறக்கும் படை அதிகாரி யசோதா தலைமையில் போலீசார்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் காரைக்காலில் இருந்து நாகையை நோக்கி வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர். இரவு நேரங்களில் சோதனை சாவடியில்  அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து ஆவணகளை சரிபார்த்து அனுப்பிவைக்கின்றனர். தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபடுவதை வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்