சரக்கு ரெயில் மூலம் 3,300 டன் உரம் வந்தது

ஆந்திராவில் இருந்து முண்டியம்பாக்கத்திற்கு சரக்கு ரெயில் மூலம் 3300 டன் உரம் வந்தது.

Update: 2021-02-28 17:52 GMT
விக்கிரவாண்டி, 

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது நெல் அறுவடையாகி, வயல்களில் 2-ம் போக நெல் நடவு செய்ய விவசாயிகள் தயாராகி வருகிறார்கள். இதற்கு ஏற்ற வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழையும் பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் போதிய நிலத்தடி நீரூற்றும், கிணற்று பாசனத்திற்கும், ஏரியிலும் போதிய அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளதாலும் சில விவசாயிகள் மகிழ்ச்சியோடு 2-ம் போக நெல் நடவு செய்து வருகிறார்கள். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட விவசாய பயன்பாட்டிற்காக ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து 3 ஆயிரத்து 300 டன் இப்கோ உரம் 57 பெட்டிகள் கொண்ட சரக்கு ரெயில் மூலம் நேற்று காலை முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்த உர மூட்டைகளை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து இறக்கி லாரிகளில் ஏற்றி, அதிகாரிகள் மேற்பார்வையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து தேவையான பகுதிகளுக்கு உரமூட்டைகளை அனுப்பி வைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்