சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: காவலாளிக்கு 10 ஆண்டு சிறை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த காவலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-03-01 05:08 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த கானத்தூர் பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு 8 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கானத்தூர் போலீசார், அங்கு காவலாளியாக வேலை செய்து வந்த மகபு ஜான் (வயது 60) என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை செங்கல்பட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணையின்போது அரசு தரப்பு வக்கீல் புவனேஸ்வரி ஆஜராகி அரசு தரப்பு சாட்சியங்களை முன்வைத்து வாதிட்டார்.

10 ஆண்டு சிறை

இருதரப்பு வாதங்களின் அடிப்படையிலும், கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட சாட்சிகளின் அடிப்படையிலும் காவலாளியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து மகபுஜான் குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு 10 ஆண்டு் சிறை தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து காவலாளி மகபு ஜானை கானத்தூர் போலீசார் கைது ெசய்து சிறையில் அடைத்தனர்.

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு தகுந்த தண்டணை பெற உதவிய கானத்தூர் போலீஸ்காரர் சுதாகர் மற்றும் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் ஏட்டு மீனாட்சி சுந்தரி ஆகிய இருவரையும் போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

மேலும் செய்திகள்