கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் கைது

வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-03-01 19:30 GMT
காரைக்குடி,

காரைக்குடி அருகில் உள்ள செங்காத்தான்குடியைச் சேர்ந்தவர் அஜித்ராம் (வயது 23) இவர் மித்ராவயலில் செல்போன் சர்வீஸ் கடை வைத்துள்ளார்.சம்பவத்தன்று இரவு 7.30 மணி அளவில் அஜித் ராம் காரைக்குடி- திருச்சி பைபாஸ் சாலையில் ஆவுடை பொய்கை என்ற இடம் அருகே தனது பெண் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அவரது பெண் நண்பர் மொபட்டில் அவரோடு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர்களை வழிமறித்து அஜித்ராம் மோட்டார் சைக்கிளின் சாவியை பிடுங்கி கொண்டு செல்போனையும் பணத்தோடு பர்சையும் பறித்து கொண்டு ரூ.10 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது அந்த பெண் மொபட்டுடன் காட்டுக்குள் சென்று மறைந்து விட்டார்.
அஜித்குமார் பணம் வாங்கி வருவதாக கூறி நடந்தே வேலங்குடி அருகே உள்ள பெட்ரோல் பங்க் வந்து அங்கிருந்து பள்ளத்தூர் போலீசாருக்கு போனில் தகவல் கூறியுள்ளார். தகவலின் பேரில் காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அருண், குன்றக்குடி இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் விரைந்து சென்று சம்பவம் நடந்த பகுதியில் நின்றிருந்த 3 பேரை பிடித்தனர். இதில் ராமேசுவரத்தை சேர்ந்த. கார்த்தி (வயது 19) என்பதும் இவர் காரைக்குடி அருகே உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை 2-ம் ஆண்டு படித்து வருபவர் என்றும், மற்றொருவர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹரிகரகுமார் (20) என்பதும்,மற்றொருவர் கூந்தலூரை சேர்ந்த அழகேசன் (23) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 3 ேபரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்