அரியமான் கடற்கரையில் கரை ஒதுங்கி கிடக்கும் சிப்பிகள்

அரியமான் கடற்கரையில் கரை ஒதுங்கி கிடக்கும் சிப்பிகள்

Update: 2021-03-04 18:33 GMT
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுபோல் கடல்வாழ் உயிரினங்களை தவிர்த்து பல அரிய வகை சிப்பிகளும், சோபிகளும் இயற்கையாகவே கடலில் உள்ளன. அதுபோல் கடலின் மிகவும் ஆழமான பகுதியில் சிப்பி மற்றும் சோவிகளையும் காணமுடியும்.இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரையில் கடல் அலை மற்றும் நீரோட்ட வேகத்தால் கடலின் அடியில் உள்ள ஏராளமான பலவகை சிப்பிகளும், சோவிகளும் கடல் நீரின் மேல் பகுதிக்கு வந்து கடல் அலையின் வேகத்தால் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி கிடக்கின்றன. கடற்கரை மணல் பரப்பு பகுதியில் பரவலாக ஏராளமான சிப்பிகளும், சோவிகளும் கரை ஒதுங்கி கிடப்பதை அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்தோடு பார்ப்பதுடன் கரை ஒதுங்கிக் கிடக்கும் சிப்பிகளையும், சோவிகளையும் ஆர்வமுடன் சேகரித்து எடுத்துச் செல்கின்றனர். இதைத்தவிர கடல் அலையின் வேகத்தால் ஏராளமான பவளப் பாறைகள் உடைந்து சேதமான நிலையில் பவளப்பாறை கற்களும் கடற்கரையில் கரையில் ஒதுங்கி கிடக்கின்றன.

மேலும் செய்திகள்