வேட்பாளர்களின் செலவை ஆய்வு செய்ய ஊடக கண்காணிப்பு அறை திறப்பு

ஊடக கண்காணிப்பு அறை திறப்பு

Update: 2021-03-05 16:19 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் வகையில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் அருகே ஊடக சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9 டி.வி.க்கள் வைக்கப்பட்டு செய்தி சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பு 24 மணி நேரமும் கண்காணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு சேனலில் ஒளிபரப்பாகும் காட்சிகளை பதிவு செய்து சேமிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வேட்பாளர்களின் விளம்பரம் மற்றும் பிரசாரத்தை கண்காணிக்க உள்ளனர். ஊடக சான்று மற்றும் ஊடக கண்காணிப்பு அறையை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று திறந்து வைத்து ஆய்வு செய்தார். செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி செந்தில்குமார், உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும் ஆதார் பதிவு மையம் முன்பு டி.வி. வைக்கப்பட்டு வாக்காளர்கள் தங்கள் வாக்கை தவறாமல் பதிவு செய்வது குறித்து விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும் செய்திகள்