மனநலம் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த நேபாள வாலிபர் சொந்த ஊர் அனுப்பி வைப்பு

மனநலம் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த நேபாள வாலிபர் சொந்த ஊர் அனுப்பி வைக்கப்பட்டாா்.

Update: 2021-03-05 21:57 GMT
ஈரோடு
நேபாளம் நாட்டை சேர்ந்த சுமன் (வயது 32) என்பவர் தனது குடும்ப வறுமை காரணமாக வேலை தேடி ரெயில் மூலம் கேரளாவிற்கு புறப்பட்டார். அப்போது அவர் தன்னுடன் வந்தவர்களை தவறவிட்டு, ஈரோட்டில் இறங்கிவிட்டார். பின்னர் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சுமன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அவர் அட்சயம் அறக்கட்டளை யாசகர்களுக்கான மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அவர் குணம் அடைந்தார்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், ரெயில் மூலம் சுமனை  சொந்த ஊரான நேபாள நாட்டிற்கு வழி அனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்