திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த தடை கலெக்டர் எச்சரிக்கை

திருவள்ளூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் இரவு 10 மணிக்கு மேல் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த கூடாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

Update: 2021-03-07 03:52 GMT

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பா.பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.,

வேட்பாளர்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்துகின்றனர். இந்த ஒலிபெருக்கிகள் மினி லாரி, வேன் போன்ற வாகனங்கள் மூலம் அனைத்தும் சாலைகள், வீதிகள் வழியாக பயணித்து அதிகாலை முதல் இரவு வரை தொடர்ந்து ஓலிக்கப்படுவதால் மாணவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

எனவே வாகனங்களிலோ, கூட்டங்களிலோ ஒலிபெருக்கிகளை பொருத்தி பயன்படுத்துவதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதி பெற்று பயன்படுத்த வேண்டும். இருப்பினும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்த அனுமதி இல்லை.

மேலும் அனுமதியின்றி ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்ட எந்த ஒரு வாகனமும் ஒலிபெருக்கி மற்றும் அதனுடன் பயன்படுத்தப்படும் எந்திரங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். கூம்பு வகையான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த கூடாது என அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

 

மேலும் செய்திகள்