4 சட்டசபை தொகுதியில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் 4 சட்டசபை தொகுதியில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

Update: 2021-03-07 19:20 GMT
சிவகங்கை,

நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் முன்னிலையில் 4 சட்டசபை தொகுதியில் பயன்படுத்தும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
வாக்குச்சாவடிகள்
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், மற்றும் சிவகங்கை, மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஓட்டு போடுவதற்காக 4 தொகுதிகளிலம் 1,679 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் காரைக்குடி தொகுதியில் 443 வாக்குச்சாவடியும், திருப்பத்தூர் தொகுதியில் 410 வாக்குச்சாவடியும், சிவகங்கை தொகுதியில் 427 வாக்குச்சாவடியும், மானாமதுரை(தனி) தொகுதியில் 399 வாக்குச்சாவடியும், உள்ளன.
இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த ஓட்டுப்பதிவு எந்திரம், கட்டுப்பாடு எந்திரம் மற்றும், ஓட்டினை உறுதி செய்யும் எந்திரம் என 6 ஆயிரத்து 216 எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
தேர்வு
இவைகளை ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக கணினி மூலம் தேர்வு செய்யும் பணி கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
பின்னர் ரேண்டம் முறையில் காரைக்குடி தொகுதிக்கு 532 ஓட்டுப்பதிவு எந்திரம், 532 கட்டுப்பாடு எந்திரம் மற்றும் 576 உறுதிசெய்யும் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது போல் திருப்பத்தூர் தொகுதிக்கு 492 ஓட்டுப்பதிவு எந்திரம், 492 கட்டுப்பாடு எந்திரம் மற்றும் 533 உறுதிசெய்யும் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சிவகங்கை, மானாமதுரை
மேலும் சிவகங்கை தொகுதிக்கு 513 ஓட்டுப்பதிவு எந்திரம், 513 கட்டுப்பாடு எந்திரம் மற்றும் 556 உறுதிசெய்யும் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இது போல் மானாமதுரை (தனி) தொகுதிக்கு 479 ஓட்டுப்பதிவு எந்திரம், 479 கட்டுப்பாடு எந்திரம், மற்றும் 519 உறுதிசெய்யும் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் மொத்தம் உள்ள 1,679 வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்த 2016 ஓட்டுப்பதிவு எந்திரம், 2016 கட்டுப்பாடு எந்திரம் மற்றும் 2184 உறுதிசெய்யும் எந்திரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒவ்ெவாரு தொகுதிக்கும் தேவையான ஓட்டுப்பதிவு எந்திரம், மற்றும் கட்டுப்பாடு  எந்திரத்துடன், கூடுதலாக 20 சதவீத எந்திரங்களும் மற்றும் 30 சதவீத உறுதிசெய்யும் எந்திரம் தயாராக உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்