3 வகையான வாக்களர்களுக்கு தபால் வாக்குகள்; கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தகவல்

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடக்கிறது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுவதால் சிறப்பு ஏற்பாடாக மூன்று வகையான வாக்காளர்களுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் வசதி செய்துள்ளது.

Update: 2021-03-09 05:13 GMT

அதன்படி 80வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட காலக்கெடுவிற்குள் இருப்பவர்கள் ஆகிய 3 பிரிவினருக்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்கூறிய வகையில் உள்ள வாக்காளர்கள் அந்தந்த பகுதி வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு அலுவலரிடம் இதற்கென உள்ள 12 டி படிவத்தை பெற்று தமது பெயர் இடம்பெற்றுள்ள சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வருகிற 16-ந் தேதிக்குள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு அலுவலர் மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்