100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம்

100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம்

Update: 2021-03-10 20:36 GMT
தா.பழூர்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஜெயங்கொண்டம் தாசில்தார் கலைவாணன் தலைமை தாங்கினார். வருகிற சட்டமன்ற தேர்தலில் மாற்றுத் திறனாளிகள், புதிய வாக்காளர்கள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் உள்பட அனைத்து தரப்பு வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்று எடுத்துக் கூறப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பாக பெண்கள் வண்ணக்கோலங்கள் வரைந்து பார்வையாளர்களை அசத்தினர். இதன்முடிவில், 100 சதவீதம் வாக்குப்பதிவிற்கு தாங்கள் கட்டாயம் வாக்களிப்போம் என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் பகவதிராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் தினேஷ், அனிதா மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர் ஷீலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்