நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரியில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

Update: 2021-03-11 12:10 GMT
நீலகிரி,

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மிக கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், உதகையில் கொரோனா விதிமுறைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசனட் திவ்யா அறிவித்துள்ளார். நீலகிரிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இரண்டாவது அலை வந்தால் கட்டுபடுத்த முடியாது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறைகளை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கபட்டுள்ளதாகவும், இது வரை 30,68,000 ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்