சங்கரன்கோவில் அருகே ஓடும் காரில் டிரைவரின் கால்களை சுற்றிய பாம்பால் பரபரப்பு

சங்கரன்கோவில் அருகே ஓடும் காரில் டிரைவரின் கால்களை சுற்றிய பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-03-11 20:13 GMT
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே பெரியசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சிவா. ஒப்பந்ததாரரான இவர் தனது வீட்டில் இருந்து சங்கரன்கோவிலுக்கு காரை ஓட்டிச் சென்றார். 

சங்கரன்கோவில் அய்யப்பன் கோவில் அருகில் சென்றபோது, திடீரென்று சிவாவின் கால்களை சுமார் 5 அடி நீள சாரைப்பாம்பு சுற்றியது. இதனால் பதறிய சிவா உடனே காரை நிறுத்தி விட்டு, பாம்பை உதறி விட்டு காரில் இருந்து வெளியே வந்தார்.

இதுகுறித்து சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, காரில் தேடியும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் காரை பழுது பார்க்கும் மையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பாம்பு ஆராய்ச்சியாளர் பரமேஸ்தாஸ் சென்று, காரின் உதிரிபாகங்களை கழட்டி, பாம்பை லாவகமாக பிடித்து, தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்