சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா

எடப்பாடி அருகே கவுண்டம்பட்டியில் சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.

Update: 2021-03-12 06:29 GMT
எடப்பாடி,

எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி சின்ன மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை சாமி அலங்காரம் செய்யப்பட்டு பூங்கரகம் ஆற்றுக்கு கொண்டு சென்று அலங்காரம் செய்து எடுத்து வரப்பட்டது.  அதைத்தொடர்ந்து காணியாசிக்காரர்கள் கத்தியுடன் கரகத்தின் முன்பு மண்டியிட்டு அமர பூசாரி அவரது தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார். இதையடுத்து ஏராளமான பெண்கள் மாவிளக்கு தட்டுடன் ஊர்வலமாக வந்து கோவிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

மேலும் செய்திகள்