பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்கள் தவக்கால சிலுவை பயணம்

பாளையங்கோட்டையில் கிறிஸ்தவர்களின் தவக்கால சிலுவை பயணம் நடந்தது.

Update: 2021-03-14 19:46 GMT
நெல்லை:

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. 

இதையொட்டி பாளையங்கோட்டையில்  கிறிஸ்தவர்களின் சிலுவைப்பயணம் நடைபெற்றது. தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலாயத்தில் இருந்து இந்த பயணம் தொடங்கியது. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட பிஷப் அந்தோணி சாமி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள், அருட்சகோதரிகள் கைகளில் சிலுவைகளை ஏந்திக் கொண்டு சென்றனர். முக்கிய வீதிகள் வழியாக சென்று இக்னேசியஸ் காண்வென்ட் பள்ளியை வந்தடைந்தனர்.

அங்கு சிலுவைப் பாதையும், திருப்பலியும் நடைபெற்றது. இதில் பேராலய பங்கு தந்தை ராஜேஷ், உதவி பங்கு தந்தையர் பிரகாசம், ரீகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்