அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி கொடிகளுடன் ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், டிராக்டர் பறிமுதல் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு

அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி கொடிகளுடன் ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-03-17 21:16 GMT
அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி கொடிகளுடன்
ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், டிராக்டர் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக வழக்கு
திருச்சி, மார்ச்.18-
அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி கொடிகளுடன் ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம், டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேர்தல் நடத்தை விதிகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரசார பயன்பாட்டுக்காக பல்வேறு வகையான வாகனங்களை பயன்படுத்தி வருகிறார்கள். பிரசாரத்தில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிகளை முறையாக கடைபிடிக்கிறார்களா? என தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் மற்றும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

கொடிகளுடன் வாகனம் பறிமுதல்

இந்தநிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி கொடியை கட்டிக் கொண்டு விதிமுறை மீறி 10 பெண்கள் உள்பட 16 பேர் பயணம் செய்து வந்த சரக்கு வாகனத்தை திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் பொறுப்பு அதிகாரி குமரகுரு தலைமையிலான பறக்கும்படையினர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். பின்னர் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்குப்பதிவு 

இதேபோல் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வ.உ.சி.சிலை அருகே நாம் தமிழர் கட்சி கொடியுடன் சென்ற டிராக்டர் வாகனத்தையும், அதில் சட்டத்துக்கு புறம்பாக பயணம் செய்து வந்த 5 பேரையும் மேற்கு தொகுதி தேர்தல் பொறுப்பு அதிகாரி பாத்திமாசகாயராஜ் தலைமையிலான பறக்கும்படையினர் மற்றும் போலீசார் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து தேர்தல் நடத்தை விதி மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்