தேர்தல் பார்வையாளர்களிடம் நேரில் புகார் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு

அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரில் புகார் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-03-21 17:54 GMT
சிவகங்கை,

அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் தேர்தல் பார்வையாளர்களிடம் நேரில் புகார் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட தேர்தல் அலுவலரும் மற்றும் மாவட்ட கலெக்டருமான மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தேர்தல் பார்வையாளர்கள்

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு நியமிக்கப்பட்டு உள்ள தேர்தல் பார்வையாளர்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து புகார்கள் தெரிவிக்கும் வகையில் கீழ்க்கண்டவாறு பார்வையாளர்கள் சந்திக்கும் நேரம் மற்றும் இடம் குறித்து தெரிவித்துள்ளார்கள்.
அதன் அடிப்படையில் காரைக்குடி, திருப்பத்தூர்; சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான காவல்துறை பார்வையாளராக வருகை தந்துள்ள லிரெமோசோபோலோதாவை, சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள வேலுநாச்சியார் விருந்தினர் மாளிகையில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 9 மணி வரை நேரடியாக சந்தித்து தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். அவருடைய கைப்பேசி எண்: 83007 99318 ஆகும்.

புகார்

காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு பொதுப்பார்வையாளர் எச்.எஸ்.சோனாவனே திங்கள், புதன் மற்றும் வௌ்ளி ஆகிய கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை காரைக்குடி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு வருவார். அப்பொழுது அரசியல் கட்சிப்பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து புகார்களை தெரிவிக்கலாம். அவருடைய கைப்பேசி எண்: 83004 23991 ஆகும்.
அதேபோல் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு பொதுப்பார்வையாளர் எச்.எஸ்.சோனாவனே செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய கிழமைகளில் 11 மணி முதல் 12 மணி வரை வருவார்.. அரசியல் கட்சிப்பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து புகார்கள் தெரிவிக்கலாம்.

சிவகங்கை

சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் சங்கரநாராணயணன், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 11 மணி வரை 12 மணி வரை வருவார். அப்பொழுது அரசியல் கட்சிப்பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து புகார்கள் தெரிவிக்கலாம். அவருடைய கைப்பேசி எண்: 83000 44263 ஆகும்.
மேலும், மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு பொதுப்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் சங்கரநாராயணன் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரை வருவார்.. அப்பொழுது அரசியல் கட்சிப்பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து புகார்கள் தெரிவிக்கலாம்.
செலவின பார்வையாளர்கள்
இது போல செலவினப்பார்வையாளர் ராகேஷ் படாடிய செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய கிழமைகளில் காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 12 மணி வரையும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கு திங்கள், புதன் மற்றும் வௌ்ளி ஆகிய கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 மணி வரையும் தங்கி இருப்பார். அப்பொழுது அரசியல் கட்சிப்பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து புகார்களை தெரிவிக்கலாம். அவருடைய கைப்பேசி எண்: 83004 30996 ஆகும்.
சிவகங்கை மற்றும் மானாமதுரை (தனி) ஆகிய சட்டமன்ற தொகுதி செலவினப் பார்வையாளர் வனஸ்ரீ ஹீள்ளன்னவா செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமை ஆகிய கிழமைகளில் சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11  மணி முதல் 12 வரையும் மற்றும் மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் காலை 11 மணி முதல் 12 வரையும் தங்கி இருப்பார்.. அப்பொழுது அரசியல் கட்சிப்பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சந்தித்து தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். அவருடைய கைப்பேசி எண்: 83004 36191 ஆகும்.
எனவே தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ள நாள் மற்றும் நேரங்களில் நேரடியாக சென்று புகார்களை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்