தொழில் முனைவோர் பயிற்சி முகாம்

விருதுநகரில் கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2021-03-21 20:17 GMT
விருதுநகர், 
விருதுநகர் ரோட்டரி சங்கம் கல்லூரி மாணவர்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாமை தொடங்கி உள்ளது. இந்த முகாமின் மூலம் மாதந்தோறும் பயிற்சி அளித்து 2 மாணவர்களை தேர்ந்தெடுத்து 5 மாதங்களில் தேர்ந்தெடுக்கப்படும் 10 மாணவர்களுக்கு சிங்கப்பூரில் தொழில் முனைவோருக்கான சிறப்பு பயிற்சி அளிக்கவும், தொழிலதிபர்களை சந்திக்கவும் தொழில் கண்காட்சியை பார்வையிடவும் திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் இந்த மாதத்திற்கான பயிற்சியில் கலந்துகொண்ட 28 மாணவர்களில் அபிஷேக், அகமது இப்ராகிம்ஷா ஆகிய 2 என்ஜினீயரிங் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறப்பு பயிற்சியாளர் ஜெயராமன் பயிற்சியளித்தார்.  நிகழ்ச்சி நிறைவு விழாவில் கலந்து கொண்டு தேர்வு பெற்றவர்களுக்கு ரோட்டரி கவர்னர் நாமினி முத்தையாபிள்ளை சான்றிதழ் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் சங்க தலைவர் வடிவேலு,  ரோட்டரி கவர்னர் (தேர்வு) இதயம்முத்து,  உதவி கவர்னர் (தேர்வு) விஜயகுமாரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்