3476 பேர் தபால் வாக்களிக்க உள்ளனர்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு ேமற்பட்ட 3,476 பேர் வீட்டில் இருந்தபடிய தபால் வாக்கு அளிக்க உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2021-03-24 17:59 GMT
சிவகங்கை, 
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு ேமற்பட்ட 3,476 பேர் வீட்டில் இருந்தபடிய தபால் வாக்கு அளிக்க உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
விண்ணப்பம்
சிவகங்கை மாவட்ட கலெக்டரும் சட்டமன்ற தேர்தல் அலுவலருமான மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வழக்கமாக தேர்தல்பணியில் உள்ளவர்கள் மற்றும் ராணுவத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் தபால் ஓட்டுடன் கூடுதலாக மாற்றுத் திறனாளி களுக்கும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், கொரோனா உள்ளதாக கருதப்படுபவர்களுக்கும் அவா்களது விருப்பத்திற்கு ஏற்ப விண்ணப்பப் படிவம் வழங்கி தபால் ஓட்டு போட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. 
இதன் அடிப்படையில் 16.3.2021 வரை ஒவ்வொரு பகுதியிலும் சட்டமன்ற தொகுதி வாரியாக மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விண்ணப்பப்படிவம் வழங்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. 
இதில் காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் 174 மாற்றுத்திறனாளிகளும், 80 வயதிற்கு மேற்பட்ட 663 பேரும் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் 280 மாற்றுத்திறனாளிகளும், 80 வயதிற்கு மேற்பட்ட 720 பேரும், சிவகங்கை சட்டமன்ற தொகுதியில் 249 மாற்றுத்திறனாளிகளும், 80 வயதிற்கு மேற்பட்ட 684 பேரும், மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதியில் 255 மாற்றுத்திறனாளிகளும், 80 வயதிற்கு மேற்பட்ட 448 ேபரும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் பெற்றுள்ளார்கள்.
தபால் ஓட்டு 
மாவட்டம் முழுவதும் மாற்று திறனாளிகள் 967 பேரும், 80 வயதிற்கு மேற்பட்ட 2509 பேரும் சேர்த்து 3,476 பேர் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்களிக்க உள்ளனர். இவர்களிடம் 26.3.2021 முதல் 31.3.2021 வரை தேர்தல் பணிக்கான அலுவலர்கள் கொண்ட குழு வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் வாக்குகளை பெற உள்ளார்கள். இதற்காக காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு 8 குழுவும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு 10 குழுவும், சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு 9 குழுவும், மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்கு 7 குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது.
 ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் தபால் வாக்கிற்கான குழுக்கள் செல்லும் விவரம் மற்றும் தபால் வாக்கு படிவம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவா்கள் விவரம் குறித்த பெயா் பட்டியல் வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்படும்.
இது தவிர, நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தோ்தலில் கூடுதலாக ெரயில்வே துறையில் பணியாற்றும் பணியாளா்கள், விமான நிலையங்களில் பணியாற்றும் பணியாளா்கள், கோவிட்-19 தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவா்கள், சிறை கைதிகள் ஆகியோருக்கும் தபால் வாக்கு அளிப்பதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்