குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி

குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் பவனி வந்தனர்.

Update: 2021-03-28 19:10 GMT
கரூர்
கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற ஏப்ரல் 4-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவர்கள் உபவாசம் கடைப்பிடித்து 40 நாட்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவர். ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி கரூர் புனித தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெபஸ்டின் துரை தலைமையில் கிறிஸ்தவர்கள் ஒன்றாக கூடி குருத்தோலையை கையில் ஏந்தி கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு பவனியாக ஒன்றாக சென்றனர். இதையடுத்து ஆலயத்தில் குருத்தோலை சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. 
இதேபோல் பசுபதிபாளையம் புனித கார்மல் அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பிச்சைமுத்து தலைமையிலும், புலியூர் குழந்தையேசு திருத்தலத்தில் பங்குத்தந்தை ஞானபிரகாசம் தலைமையிலும், வேலாயுதம்பாளையம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை சுந்தர்ராஜ் தலைமையிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்