காவிரி பாதுகாப்பு இயக்க நிர்வாகக்குழு கூட்டம்

காவிரி பாதுகாப்பு இயக்க நிர்வாகக்குழு கூட்டம் நடந்தது.

Update: 2021-03-29 19:43 GMT
நொய்யல்
நஞ்சை புகளூரில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். இயக்க வழக்கறிஞர் ஜெகநாதன் வரவேற்றார். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் சண்முகம், தமிழ்ச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், நொய்யல் ஆற்றில் ஒரத்துப்பாளையம் அணையில் சாயக்கழிவு நீரை தேக்கி வைக்க கூடாது என டெல்லி உச்சநீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு திறந்து விடப்பட்டுள்ள சாயக்கழிவு நீர் ஆண்டுமுழுவதும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்பு தான் காவிரியில் கலக்க வேண்டும். காவிரி ஆற்றில் ஒரு அடி மட்டுமே மணல் அள்ள வேண்டும் அப்படி அள்ளப் பட்ட இடத்தில் 5 ஆண்டுகள் மணல் அள்ளக் கூடாது என்ற விதி இருந்தும் விதிகளை மீறி 150 ஆண்டுகள் அள்ள வேண்டிய அளவுக்கு (சுமார் 30 அடி ஆழத்திற்கு) மணல் அள்ளப்பட்டுள்ளது. எனவே 20 ஆண்டுகளுக்கு காவிரியில் மணல் அள்ளக்கூடாது. இந்த இரண்டு தீர்மானத்தை பொதுமக்களிடம் பிரசாரத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்