தீவனம் தேடி அலையும் யானைகள்

பவானிசாகர் வனப்பகுதியில் கடும் வறட்சியால் தீவனம் தேடி யானைகள் அலைகின்றன.

Update: 2021-03-29 21:39 GMT
பவானிசாகர் வனப்பகுதியில் கடும் வறட்சியால் தீவனம் தேடி யானைகள் அலைகின்றன.
உணவு பிரச்சினை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிகமாக வசித்து வருகின்றன. குறிப்பாக கர்நாடகா மற்றும் கேரளா மாநில யானைகள் அதிகமாக வசித்து வருகின்றன. இங்குள்ள யானைகள் பவானிசாகர் வழியாக ஓடும் மோயாற்றுக்கு தினமும் சென்று தண்ணீரை குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றன.
ஆனால் யானைகளுக்கு போதிய உணவு கிடைப்பதில்லை. 270 கிலோ வரையான உணவு தேவைப்படும் நிலையில் நாளொன்றுக்கு 100 கிலோ உணவு கிடைப்பதே அரிதாக உள்ளது.
கோரிக்கை
மேலும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பவானிசாகர் வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் கருகி கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் யானைகள் தீவனத்தை தேடி அலைந்து திரிகின்றன.
எனவே வனத்துறையினர் யானைகள் விரும்பி உண்ணும் தீவனங்களை யானைகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்