198 மது பாட்டில்கள் பறிமுதல்

வாலிகண்டபுரத்தில் 198 மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-04-01 20:17 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கனிமம் மற்றும் சுரங்கத்துறையின் தனி துணை தாசில்தார் பாக்கியராஜ் தலைமையில், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், போலீசார் பன்னீர்செல்வம், புவனேஷ்வரி ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் ஒரு டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் உடனடியாக அங்கு சென்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 150 குவார்ட்டர் பாட்டில்கள், 48 பீர் பாட்டில்கள் என மொத்தம் 198 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மதுபான பாட்டில்களை பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்