சத்தியமங்கலம் அருகே ராமர் போலிமலையில் காட்டுத்தீ பல நூறு ஏக்கரில் மரங்கள் எரிந்து நாசம்

சத்தியமங்கலம் அருகே ராமர் போலி மலையில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.

Update: 2021-04-01 22:03 GMT
சத்தியமங்கலம் அருகே ராமர் போலி மலையில் காட்டுத்தீ பற்றி எரிகிறது.
ராமர் போலி மலை
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கடம்பூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ளது ராமர் போலி மலை. தற்போது வனப்பகுதி முழுவதும் கடுமையான வறட்சி நிலவுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை ராமர்போலி மலையில் திடீரென கரும்புகை உண்டானது. சிறிது நேரத்தில் செடி, கொடிகள் பற்றி எரிந்தது. வெயிலில் காய்ந்து இருந்த மரங்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. 
கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, இதுவரை பல நூறு ஏக்கரில் மரங்கள் எரிந்துவிட்டன. தொடர்ந்து தீ எரிந்தால் வனப்பகுதி முழுவதும் நாசமாகிவிடும். மூலிகை செடிகள் கருகிவிட்டன. வனவிலங்குகள் வெப்பம் தாங்காமல் இடம் பெயர்ந்து விட்டன. எனவே வனத்துறையினர் ஆளில்லா குட்டி விமானம் அல்லது ஹெலிகாப்டரில் சென்று உடனே தீயை அணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மேலும் செய்திகள்