புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம்

புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2021-04-02 21:07 GMT
பெரம்பலூா்:
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட வெள்ளிக்கிழமையை, உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு நேற்று சிலுவை பாதை ஊர்வலம் நடந்தது. இதில் பெரம்பலூர் தூய பனிமயமாதா திருத்தலத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள் காலை 6 மணிக்கு, இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது சந்தித்த துயரங்களை விளக்கும் வகையில் சிலுவைப்பாடு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது, ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவைபாடு பாடல்களை பாடியபடி பெரம்பலூர் தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்தனர். பின்னர் ஆலயத்தில் நற்கருணை ஆராதனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடி ஆராதனையில் ஈடுபட்டனர். மாலையில் திருப்பாடுகளின் கொண்டாட்டம் நடந்தது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதேபோல் பெரம்பலூரில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயம், தூய யோவான் தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளி வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்