தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது குறித்து புகார் தெரிவித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.

Update: 2021-04-04 18:54 GMT
சிவகங்கை,

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது குறித்து புகார் தெரிவித்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
பேட்டி
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி. சிவகங்கையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தலைமையிலான எங்களது கூட்டனி கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை போல் அமோக வெற்றி பெறும். பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா சமீபத்தில் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் பெரியார் கொள்கையை தமிழகத்தில் இருந்து அகற்றுவோம் என கருத்து தெரிவித்துள்ளார். அதற்கு அ.தி.மு.க. தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் நிலைப்பாடு என்ன என்று இதுவரை கூறவில்லை. பா.ஜ.கவின் அடிப்படை கொள்கைகளான இந்து, இந்துதுவா என்கிற கொள்கைகளை மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள். பா.ஜனதா தலைவர்களின் பிரசாரங்களை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நடவடிக்கை இல்லை
எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் நடைபெறும் வருமானவரி சோதனையால் பா.ஜ.க.விற்கு யாரும் வாக்களிக்கமாட்டார்கள். பா.ஜ.க.வின் கீழ்த்தரமான அரசியலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. 
தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளின் உதவியோடு பணப்பட்டுவாடா நடைபெற்று வருகிறது. இது குறித்து பலமுறை தேர்தல் ஆனையத்தில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இந்த பணப்பட்டுவாடாவால் எந்த மாற்றமும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்
-----------

மேலும் செய்திகள்