கிராமங்களில் மாணவர்கள் பயிற்சி

கிராமங்களில் மாணவர்கள் பயிற்சி

Update: 2021-04-07 15:46 GMT
காங்கேயம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் வேளாண் மாணவர்கள் கிராமப்புற தங்கல் திட்டத்தின் கீழ் கிராமங்களுக்கு சென்று தங்கி அங்குள்ள விவசாயிகளுக்கு வேளாண்மை குறித்த பயனுள்ள தகவல்களை செயல்முறை விளக்கத்துடன் விரிவாக கூறி வருவருகின்றனர்.
இதன்படி தற்போது திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் காங்கேயம் அருகே உள்ள வீரணம்பாளையம் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் பாரம்பரிய மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் வேளாண்மைத்துறை அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப அலுவலர் பிரதீப் கலந்து கொண்டு வேளாண் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாரம்பரிய மரக்கன்றுகளின் பயன்கள் குறித்து விளக்கமளித்தார்.

மேலும் செய்திகள்