இருதரப்பினர் மோதல்; 18 பேர் மீது வழக்கு

திருக்குறுங்குடி அருகே ஏற்பட்ட இருதரப்பினர் மோதல் தொடர்பாக 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-04-07 19:02 GMT
ஏர்வாடி, ஏப்:
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோவில் பங்குனி திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு நம்பித்தலைவன் பட்டையம் மேலத்தெருவை சேர்ந்தவர்களுக்கும், கீழத்தெருவை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். இதற்கிடையே மோதல் தொடர்பாக இருதரப்பினர் மீதும் ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கீழத்தெருவை சேர்ந்த ராமர் மனைவி மாரியம்மாள் (வயது 38) என்பவர் கொடுத்த புகாரில் அவரது மகன் இளங்காமணி, சிவன்பாண்டியன் மகன் இசக்கிராஜா, முருகன் மகன் இசக்கிராஜா ஆகியோரை செந்தில், சொக்கேஷ் கைலாப், செல்வசுரேஷ், சுப்புராஜ், அறிவழகன் ஆகிய 5 பேர் சேர்ந்து தாக்கியதாக கூறி உள்ளார். இதன்பேரில் செந்தில் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் மேலத்தெருவை சேர்ந்த சுதந்திரபாண்டியன் (76) கொடுத்த புகாரில் பாண்டி மகன் சுரேஷ், சுடலைமுத்து மகன் மணி, அண்ணாத்துரை மகன் வனதுரை, மகேந்திரன் மகன் சுதாகர் ஆகியோரை, ஸ்ரீதர், முத்துராஜா, அருள்பாண்டி, ஐகோர்ட் ராஜா, சண்முகசுந்தரம், இசக்கிராஜா, மற்றொரு இசக்கிராஜா, ஆட்டோ ராஜேஷ், இசக்கிதுரை, நம்பிராஜா, சின்னராஜா, பெரியராஜா, சக்திவேல் மற்றும் பலர் சேர்ந்து கற்களை வீசி தாக்கியதாக குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் ஸ்ரீதர் உள்பட 13 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்