நீண்டவரிசையில் காத்திருக்காமல் வாக்களித்து சென்ற மக்கள்

கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதால் நீண்டவரிசையில் காத்திருக்காமல் பொதுமக்கள் வாக்களித்து சென்றனர்

Update: 2021-04-07 19:02 GMT
திருப்பரங்குன்றம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில், 1,050 வாக்காளர்கள் வீதம் வாக்குச்சாவடி மையங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டது. இதனால் கடந்த கால தேர்தல்கள் போல வாக்காளர்கள் நீண்டநேரம் வரிசையில் நிற்காத நிலை ஏற்பட்டது. திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை கடந்த காலங்களில் 295 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனால் வாக்காளர்கள் நீண்டநேரம் கியூவில் நின்று காத்திருந்து வாக்களித்தனர். ஆனால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 295-ல் இருந்து 458 வாக்குச்சாவடியாக உயர்த்தப்பட்டது. இதனையொட்டி பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் நீண்டவரிசை காணப்படவில்லை. வாக்காளர்கள் தங்கள் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு வந்த அடுத்த நிமிடமே வாக்களித்து விட்டு சென்று விட்டனர். வாக்குச்சாவடி கூடுதலாக அமைத்தது, வாக்கு பதிவுக்காக கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டதாலும் வாக்குச்சாவடியில் நீண்டவரிசை காணப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதை வாக்காளர்கள் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்