புதிய துணைவேந்தர் நியமனம்

தி்ண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டார்.

Update: 2021-04-07 19:52 GMT
திண்டுக்கல்: 
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருந்த நடராஜன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். 

அதன் பின்னர் துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை. தற்போது பல்கலைக்கழக பேராசிரியர் குபேந்திரன் துணைவேந்தராக (பொறுப்பு) வகித்து வந்தார். 

இந்த நிலையில் மத்திய உயர் கல்வித்துறையின் உத்தரவின்பேரில் காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்திற்கு புதிய துணை வேந்தராக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பேராசிரியர் எஸ்.மாதேஸ்வரன் என்பவரை பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை நியமனம் செய்து உத்தரவிட்டார்.  

அவர் நேற்று மாலை புதிய துணைவேந்தராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  இவர், உலகளவில் கணித அளவீட்டு பொருளாதார வல்லுனர். பெங்களூருவில் உள்ள சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் 30 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றினார். 

பின்னர் அதே நிறுவனத்தில் இயக்குனராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் ஜெர்மனியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் மதிப்புறு கல்வியாளராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 

கர்நாடக மாநில அரசின் பல்வேறு பொருளாதார திட்டங்களை வடிவமைக்கும் ஆராய்ச்சி குழு தலைவராகவும், உறுப்பினராகவும் இருந்துள்ளார். 

இவருக்கு, கர்நாடக அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‘கேம்பே கவுடா’ விருதும், தெற்காசிய நாடுகளின் சூழலியல் மற்றும் பொருளாதாரம் அமைப்பு சார்பில் விருதும் வழங்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்