வாக்கு எண்ணும் மையத்தில் கிருமிநாசினி தெளிப்பு

ஊட்டியில் வாக்கு எண்ணும் மையத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2021-04-08 14:24 GMT
ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் 3 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ஊட்டி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

 அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், அரசியல் கட்சி முகவர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம், கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊட்டி வாக்கு எண்ணும் மையத்தில் நகராட்சி சார்பில் ஊழியர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

கல்லூரி நுழைவுவாயில், வளாகம், அரசியல் கட்சி முகவர்கள் தங்கும் இடம், கண்காணிப்பு கோபுரங்கள், பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் அறைகளுக்கு செல்லும் பகுதிகளில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. 

அதேபோல் வாக்குச்சாவடிகளாக செயல்பட்ட அரசு, தனியார் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து வருவதால், முன்கூட்டியே கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்