ஆந்திராவில் இருந்து கடத்திவந்து சந்தவாசல் பகுதியில் செம்மரங்களை பதுக்கிய 4 பேர் கைது

ஆந்திராவில் இருந்து கடத்திவந்து சந்தவாசல் பகுதியில் செம்மரங்களை பதுக்கிய 4 பேர் கைது

Update: 2021-04-08 15:05 GMT
கண்ணமங்கலம்

திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருள்நாதனுக்கு கிடைத்த தகவலின்பேரில், சந்தவாசல் வனச்சரகர் பி.செந்தில்குமார் தலைமையில், வனவர்கள் பி.ஏழுமலை, எஸ்.பூபாலன், வனக்காப்பாளர்கள் சி.சங்கர், ஜே.முனிவேல், பி.தனசேகரன், எம்.மணி, வனக்காவலர்கள் எஸ்.நவநீதகிருஷ்ணன், எஸ்.மருவரசன், எம்.ஏழுமலை, எ.பச்சியப்பன் ஆகியோர் அடங்கிய வனத்துறையினர் பள்ளக்கொல்லை பீட், ஆனைக்கல் வழி சரகத்தில் நேற்று காலை 7 மணியளவில் ரோந்து சென்றனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட செம்மரக்கட்டைகளை பதுக்கிவைக்க, அவைகளை 4 பேர் கத்தியால் சீவி தயார்படுத்திக்கொண்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் இரும்புலி கிராமத்தை சேர்ந்த குட்டி என்ற தஞ்சி (வயது 42), கொளத்தூர் குப்பம் கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை (28), கீழ்சரணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி (26), வேடகொல்லைமேடை பகுதியை சேர்ந்த கனகசபை (33) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 294 கிலோ செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்