கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படுமா?

பரமக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-04-08 17:12 GMT
பரமக்குடி, 
பரமக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அபராதம்
தமிழகத்தில் கொரனோ 2-வது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது.நாளுக்குநாள் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைந்து வருகின்றனர். ஆனால் மக்களிடையே கொரோனா குறித்த விழிப்புணர்வு பயம் இல்லை என்பதே வேதனைக்குரியதாகும். 
ராமநாதபுரம் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்திருந்தார். ஆனால் அதை பொதுமக்கள் யாரும் பின்பற்றாமல் எந்தவித அச்சமுமின்றி அணியாமல் உள்ளனர். குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பஸ் நிலையம், ெரயில் நிலையம், பேக்கரிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் கூட முககவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை பயன்படுத்தப்படாத நிலை உள்ளது.
கோரிக்கை 
சிறு குழந்தைகளோடு வரும்போதும் இதே நிலைதான் உள்ளது. சுகாதாரத் துறையினரும் நகராட்சி நிர்வாகமும் இதற்கு தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு கொேரானா குறித்த கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்