ஆனைமலை ஒன்றியத்தில் பலத்த காற்றுக்கு தென்னை மரங்கள் சேதம்

ஆனைமலை ஒன்றியத்தில் பலத்த காற்றுக்கு தென்னை மரங்கள் சேதம் அடைந்தன.

Update: 2021-04-08 17:34 GMT
பொள்ளாச்சி

ஆனைமலை ஒன்றியத்தில் பலத்த காற்றுக்கு தென்னை மரங்கள் சேதம் அடைந்தன. 

பலத்த காற்று 

ஆனைமலை அருகே உள்ள ஆத்து பொள்ளாச்சி, ஒடையகுளம், மார்ச்சநாயக்கன்பாளையம், பெரியபோது மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளன. 

அதுபோன்று இந்த பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் விவசாயிகள் வாழைகளையும் சாகுபடி செய்து உள்ளனர்.  இந்த நிலையில் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் இந்த பகுதிகளில் பலத்த காற்று வீசியதுடன் மழையும் பெய்தது. 

தென்னை மரங்கள் சேதம் 

இந்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் தென்னை மற்றும் வாழைகள் சாய்ந்து சேதமானது. இதுகுறித்து அந்தப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, எத்தனை மரங்கள் சேதமடைந்தது என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இழப்பீடு 

இது குறித்து விவசாயிகள் கூறும்போது, பலத்த காற்றுக்கு ஏராளமான தென்னை மரங்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வாழைகள் சேதமடைந்துள்ளன. 

எனவே அவற்றை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்