கொரோனா தடுப்பு நடவடிக்கை; நெல்லையில் பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெல்லையில் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Update: 2021-04-08 18:53 GMT
நெல்லை, ஏப்:
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நெல்லையில் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா பரவல்

தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. நெல்லை மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நெல்லை மாவட்ட நிர்வாகம், நெல்லை மாநகராட்சி, சுகாதார துறையினர் இணைந்து கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவின்பேரிலும், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின்பேரிலும், மாநகர பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பஸ்களில் கிருமிநாசினி தெளிப்பு

நெல்லை பெருமாள்புரம் தற்காலிக பஸ் நிலையம், பாளையங்கோட்டை பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் சுகாதார பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் ஆட்டோக்களிலும் கிருமிநாசினி தெளித்தனர். நகரில் உள்ள ஏ.டி.எம். மையங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு சுகாதார துறையினர் அறிவுறுத்தினர்.

இந்தப் பணிகளை மாநகராட்சி உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன், மேற்பார்வையாளர் முருகன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் கனகபிரியா உள்ளிட்டோர் கண்காணித்தனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்