காரியாபட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?

காரியாபட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

Update: 2021-04-08 19:47 GMT
காரியாபட்டி
காரியாபட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சிறுத்தைகள் நடமாட்டம் 
காரியாபட்டி, திருச்சுழி குண்டாற்று பகுதிகளில் மான், மயில், காட்டுப்பன்றிகள் உள்ளன. இந்த நிலையில் தற்போது காரியாபட்டி அருகே அல்லிக்குளம் காட்டுப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக கூறி பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்தகிராமத்தை சேர்ந்தவர்கள் காட்டுப்பகுதிக்கு விறகு வெட்ட சென்ற போது 2 சிறுத்தைகள் ஓடியதாகவும், இதை கண்ட மக்கள் வீட்டிற்கு வந்து கிராம மக்களிடம் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என்று கூறியதை அடுத்து அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தடயங்கள்
பின்னர் வத்திராயிருப்பு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து வனத்துறையினர் அல்லிக்குளம் கிராமத்திற்கு வந்து காட்டுப்பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருந்ததற்கு ஏதாவது தடயங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தனர்.
பின்னர் கிழவனேரி, புதுப்பட்டி பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருக்கிறதா என தடயங்கள் இருக்கிறதா என  பார்வையிட்டனர்.. மேலும் அல்லிக்குளம் காட்டுப்பகுதியில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்