கன்னிமார் புதிய சிலைக்கு சிறப்பு பூஜை

பாரைப்பட்டியில் புதிய கன்னிமார் சிலைக்கு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2021-04-08 21:11 GMT
அழகர்கோவில்,

மதுரை மாவட்டம் காஞ்சரம்பேட்டையை அடுத்த பாரைப்பட்டியில் சித்தி விநாயகர், பேசும் கன்னிமார் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி விநாயகர் சிறப்பு பூஜையுடன் நீர் நிலையில் வைத்து பூஜைகள் நடந்தது. 
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட கருங்கல் மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதிக்கு கொண்டு வரப்பட்டது. இதில் 7 முகம் கொண்டு அமர்ந்த நிலையில் உள்ள பேசும் கன்னிமார் சிலைகள் கலை நுணுக்கத் துடன் செதுக்கப்பட்டது. ஐந்து தலை கொண்ட நாகத்தின் அடையாளத்துடன் அந்த சிலை பரிபூர்ணமானது. அதன் பின்னர் நேற்று காலையில் அப்பன் திருப்பதி மண்டபத்தில் அழகர் மலைநூபுர கங்கை தீர்த்தத்தினால் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து நீர் நிலையில் பேசும் கன்னிமார் சிலை வைக்கப்பட்டது. தொடர்ந்து 48 நாள் ஜல பிரதட்சணம் நடைபெறும். அதன் பிறகு கும்பாபிஷேக பணிகள் நடைபெறும். 

மேலும் செய்திகள்