சேலத்தில் ரூ.92 கோடியில் ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

சேலத்தில் ரூ.92 கோடியே 13 லட்சம் செலவில் ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-04-08 23:02 GMT
சேலம்:
சேலத்தில் ரூ.92 கோடியே 13 லட்சம் செலவில் ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஈரடுக்கு பஸ் நிலையம்
சேலம் மாநகராட்சியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சேலம் பழைய பஸ் நிலைய பகுதியில் ஈரடுக்கு பஸ் நிலையம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
ரூ.92 கோடியே 13 லட்சம் மதிப்பில் நவீன முறையில் ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக அங்கிருந்த பஸ் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதற்கு எதிர்புறம் உள்ள மைதானத்தில் தற்போது தற்காலிகமாக டவுன் பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது.
பணிகள் தீவிரம்
மேலும் கடந்த சில நாட்களாக ஈரடுக்கு பஸ் நிலைய கட்டுமான பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகளும் அடிக்கடி சென்று ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். 
இந்த நிலையில், ஈரடுக்கு பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதை தொடர்ந்து தற்போது பெயிண்ட் அடிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சேலம் ஈரடுக்கு  பஸ்நிலையம் கொண்டு  வரப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்