தூய மங்கள அன்னை ஆலய திருவிழா

தூய மங்கள அன்னை ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது.

Update: 2021-04-09 20:02 GMT
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள தூய மங்கள அன்னை ஆலய திருவிழா நடைபெற்று வருகிறது. முன்னதாக கடந்த 4-ந் தேதி கொடி ஏற்றப்பட்டு தினமும் சிறப்பு திருப்பலி நடைபெற்று வருகிறது. 
இதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டு, மூன்று சப்பரங்களில் மங்கள அன்னை சொரூபம் அலங்கரித்து வைக்கப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக பவனி வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. 
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று(சனிக்கிழமை) 5 சப்பரங்களில் சிறப்பு தேர் பவனி நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்