திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

செந்துறை அருகே திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2021-04-09 20:03 GMT
செந்துறை:

தீ மிதித்து நேர்த்திக்கடன்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பெரியாகுறிச்சி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தீமிதி திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தீமிதி திருவிழா கடந்த 18 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஏராளமானவர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதி அம்மனை வழிபட்டனர்.
இன்று முதல் தடை
கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக அதிகளவில் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், தமிழக அரசு எச்சரிக்கை செய்த நிலையிலும் திருவிழாவில் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் பங்கேற்றனர். மேலும் கொரோனா பரவலை தடுக்க இன்று(சனிக்கிழமை) முதல் திருவிழாக்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ள நிலையில், இந்த பகுதியில் கடைசியாக நேற்று தீமிதி திருவிழா நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்