சென்னை காசிமேட்டில் காற்றில் பறந்த சமூக இடைவெளி!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Update: 2021-04-11 02:51 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 11-ந் தேதி (இன்று) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன.

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப் படுகிறது.

இந்நிலையில் கடற்கரை மூடப்பட்டுள்ள நிலையில் சென்னை காசிமேடு துறைமுகம் மற்றும் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மீன் பிரியர்கள் மீன் வாங்குவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் காலை முதல் குவிந்த வண்ணம் உள்ளனர். மீன்களை மட்டும் வாங்குவதில் கவனம் செலுத்துவதால் மக்கள் அனைவரும் சமுக இடைவெளியை மறந்து கூட்டம் கூட்டமாக வருவதால் கொரோனா பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சிலர் முககவசம் அணிந்தும் முக கவசம் அணியாமலும் மீன்களை வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்