செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் ஆலோசனை கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2021-04-11 04:45 GMT
கலெக்டர் ஜான் லூயிஸ்

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் போக்குவரத்து துறை செயலாளர் சமயமூர்த்தி கலந்துக்கொண்டு ஆலோசனை வழங்கினார்.

அப்போது மாவட்ட கண்காணிப்பாளரும், போக்குவரத்து துறை செயலாளருமான சமயமூர்த்தி பேசும்போது, மாவட்டத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன்படி பொதுமக்கள் வெளியே செல்லும்போது பொது இடங்களில் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். தேவையில்லாமல் அடிக்கடி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை மையங்கள் ஆகியவை நடத்திடவும், வீட்டுக்கு வீடு சென்று காய்ச்சல் சளி இருமல் உள்ளவர்களை தினந்தோறும் கண்காணிக்கவும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, சுகாதார துறை துணை இயக்குநர் பிரியா, நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் முத்துகுமார் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

மேலும் செய்திகள்