கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு

சின்னசேலத்தில் கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்கப்பட்டது.

Update: 2021-04-11 18:55 GMT
சின்னசேலம், 

சின்னசேலம் அருகே தோட்டப்பாடியில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காட்டில் மான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்த காட்டில் இருந்து மான் ஒன்று வெளியேறி  தண்ணீர் தேடி சின்னசேலம் கூகையூர் சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் உள்ள ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இது குறித்த தகவலின் பேரில் சின்னசேலம் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி மானை மீட்டு உளுந்தூர்பேட்டை வனச்சரக அலுவலர் காதர்பாஷா, வனக்காப்பாளர் ராமநாதன், வனக்காவலர் சவுந்தர்ராஜன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த மானை பாதுகாப்பாக தோட்டப்பாடி காப்புக்காட்டுக்கு கொண்டு சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்