மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலியானார்.

Update: 2021-04-11 19:12 GMT
மணமேல்குடி
மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடி பகுதியை சேர்ந்தவர் சரியக்குட்டி (வயது 70). இவர் கட்டுமாவடி கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கலக்கமங்கலம் பகுதியை சேர்ந்த சித்திரவேல் மகன் விஜய் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சரியக்குட்டி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விஜய் படுகாயமடைந்தார். இந்த விபத்து குறித்து மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்