மக்கள் நீதிமன்றம் மூலம் 436 வழக்குகளுக்கு தீர்வு; பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.14.79 கோடி இழப்பீடு

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 436 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.14.79 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

Update: 2021-04-11 21:16 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 436 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.14.79 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.
லோக் அதாலத்
நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் மக்கள் நீதிமன்றம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கி, மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் எஸ்.லட்சுமி முன்னிலை வகித்தார்.
ரூ.14.79 கோடி
மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் 20 குழுக்கள் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 2 ஆயிரத்து 268 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
முடிவில் 436 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.14 கோடியே 79 லட்சத்து 37 ஆயிரத்து 562 இழப்பீடாக வழங்கப்பட்டது. இதில் நீதிபதிகள் முரளிதரன், ஜோதி, மாலதி, லதா, குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள்.

மேலும் செய்திகள்