சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்ே்பாது ஓசோன் காற்று வாங்கி மகிழ்ந்தனர்.

Update: 2021-04-12 15:23 GMT
பொறையாறு:
தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்ே்பாது ஓசோன் காற்று வாங்கி மகிழ்ந்தனர். 
ஓசோன் காற்று 
தமிழ்நாடு அரசு கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூடுவதற்கு தடைவிதித்துள்ளது. ஆனால் நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடற்கரைக்கு தடைவிதிக்கவில்லை. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் வரலாற்று சிறப்புமிக்க கடற்கரையில் நேற்றுமுன்தினம் மாலை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். 
தரங்கம்பாடி கடற்கரையில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் "ஓசோன்" காற்று வீசும். இதனை அறிந்த பலர் குடும்பத்தோடு கடற்கரைக்கு வந்து ஓசோன் காற்று வாங்கி மகிழ்ந்தனர். 
ரோந்து பணி 
தரங்கம்பாடி கடற்கரையில் கடலோர காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், காரைக்கால் மாவட்ட எல்லை ஆரம்பம், மயிலாடுதுறை மாவட்டம் எல்லையான நண்டலாறு சோதனைச்சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்