பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு

காரைக்குடியில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2021-04-12 19:10 GMT
காரைக்குடி,

பள்ளி மாணவ-மாணவிகளின் தனித்திறன் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக தேவதைகள் கூட்டம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் நிறுவனர் பேராசிரியை தென்றல் கொரோனா காலத்தில் பள்ளிகளே இயங்காத நிலையில் பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடங்களை கற்பித்து வந்தார். இந்த அமைப்பின் சார்பில் வாட்ஸ்அப் வழியாக தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கதை, கட்டுைர உள்ளிட்ட பல்ேவறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு காரைக்குடியில் உள்ள நேஷனல் பயர் சேப்டி கல்லூரியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஆனந்தா தலைமை தாங்கினார். கவிஞர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். தேவதைகள் கூட்டத்தின் நிறுவனர் தென்றல் சிறப்புரை ஆற்றினார்.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுப்பையா பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள், நூல்களையும் பரிசாக வழங்கினார். இதில் அரிமா எஸ்.சையது, எய்டு இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

மேலும் செய்திகள்