திருத்துறைப்பூண்டி அருகே பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி அருகே பயன்படுத்த முடியாத பயணிகள் நிழற்குடையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2021-04-14 14:06 GMT
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பாமணி ஊராட்சியில் பேருந்து பயணிகள் நிழற்குடை உள்ளது. தூத்துக்குடி- சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் இ்ந்த நிழற்குடை உள்ளது.

இதனால் இங்கிருந்து நாகப்பட்டினம், நாகூர், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் இந்த நிழற்குடையைத்தான் பயன்படுத்துவார்கள்.

பயன்படுத்த முடியாத நிலையில்...

மேலும் தலைக்காடு, கொருக்கை, உம்பளச்சேரி, ஓரடியம்புலம் தலைஞாயிறு செல்லும் பொதுமக்களும் இந்த நிழற்குடையையே பயன்படுத்தி வந்தனர்.

இந்த பயணிகள் நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகளே இல்லை. மேலும் நிழற்குடையின் முன்பு செடி, கொடிகள் மண்டி பராமரிப்பில்லாமல் காணப்படுகிறது. சமீபகாலமாக அந்த பயணிகள் நிழற்குடையை பயணிகள் யாரும் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஆகவே பொதுமக்களுக்கு அதிக அளவில் உபயோகமாக உள்ள இந்த பயணிகள் நிழற்குடையை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்