தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி கரூர் மாவட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-04-14 17:32 GMT
கரூர்
தமிழ்ப்புத்தாண்டு 
சித்திரை மாதம் 1-ந்தேதியான நேற்று தமிழ்ப் புத்தாண்டு பிறந்தது. இதனையொட்டி கரூரில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதன் ஒருபகுதியாக கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் காலையிலேயே பயபக்தியுடன் கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கொடிமரத்தின் முன்பு விளக்கேற்றி வழிபாடு நடத்தினர். 
கல்யாண வெங்கடரமணசாமி கோவில்
இதேபோல் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமணசாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கரூர் மாரியம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அனைத்து கோவில்களிலும் முக கவசம் அணிந்த பிறகே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் சாமிதரிசனம்
இதேபோல சின்ன ஆண்டாங்கோவில் அண்ணாசாலையில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகருக்கு காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் விநாயகரை பக்தர்கள் பய பக்தியுடன் தரிசித்தனர். இதேபோல் பசுபதீஸ்வரா அய்யப்பன் கோவிலில் அய்யப்பனுக்கு காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 
இதேபோல் வெண்ணைமலை முருகன் கோவிலில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்